​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2025க்குள் தமிழகத்தை காசநோய் இல்லாத மாநிலமாக மாற்ற இலக்கு - அமைச்சர் விஜயபாஸ்கர்

Published : Jul 20, 2019 10:13 AM



2025க்குள் தமிழகத்தை காசநோய் இல்லாத மாநிலமாக மாற்ற இலக்கு - அமைச்சர் விஜயபாஸ்கர்

Jul 20, 2019 10:13 AM

2025-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை காசநோய் இல்லாத மாநிலமாக மாற்றுவது தொடர்பான விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கம் சென்னை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பல்வேறு கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவ இறுதி ஆண்டு மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு எழுதுவது தொடர்பான தேசிய மருத்துவ கழக மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

முற்பட்ட பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.