​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதலனின் தாயை மின் கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை

Published : Jul 20, 2019 8:13 AM



காதலனின் தாயை மின் கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை

Jul 20, 2019 8:13 AM

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் தந்தை காதலனின் தாயை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி- செல்வி தம்பதிக்கு 25 வயதில் மகன் உள்ளார். இந்த இளைஞரும், அதே ஊரைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரின் மகளும் காதலித்து வந்துள்ளனர். கடந்த மாதம் கொளஞ்சி தனது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்து விட்டார்.

இந்நிலையில் காதலர்கள் இருவரும் சிலநாள்கள் முன்பு வீட்டை விட்டு சென்று விட்டனர். இதனால் இரு குடும்பத்தினர் இடையே பிரச்னை இருந்து வந்தது. இது குறித்து காதலனின் தாயார் செல்வியிடம், பெண்ணின் தந்தை கொளஞ்சி தகராறு செய்தது மட்டுமின்றி செல்வியை அங்கிருந்த மின்கம்பத்தில் கட்டி தாக்கியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று செல்வியை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

மேலும் செல்வி கொடுத்த புகாரின் பேரில் கொளஞ்சியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.