​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இருட்டில் மெழுகுவர்த்திகளை ஏற்றி காங். தொண்டர்களுடன் பிரியங்கா தர்ணா

Published : Jul 20, 2019 7:41 AM



இருட்டில் மெழுகுவர்த்திகளை ஏற்றி காங். தொண்டர்களுடன் பிரியங்கா தர்ணா

Jul 20, 2019 7:41 AM

உத்தரப்பிரதேச மாநிலம் சோனபத்ரா செல்ல அனுமதி மறுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தமது கட்சியினருடன் விடுதியில் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

விடுதிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்ட போதும் இருட்டில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். சோனாபத்ராவில் நிலத்தகராறு காரணமாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 3 பெண்கள் உள்பட பழங்குடியினத்தைச் சேர்ந்த பத்து பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முயன்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போலீசாரால் நாராயண்புர் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனைக் கண்டித்து ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களுடன் அங்குள்ள சூனார் விடுதியில் பிரியங்கா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனிடையே இப்பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலவரம் நடைபெற்ற பகுதியில்144 தடையுத்தரவு அமலில் இருந்த நிலையில் அதை மீறும் வகையில் பிரியங்கா காந்தி தமது ஆதரவாளர்களுடன் சென்றதால் தடுத்து நிறுத்தப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.