​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாயைப் பிரிந்து பாட்டி வீட்டில் வாழ்ந்த இரண்டு சிறுமிகளிடம் அத்துமீறல் - 8 பேர் போக்சோ சட்டத்தில் கைது

Published : Jul 20, 2019 7:35 AM



தாயைப் பிரிந்து பாட்டி வீட்டில் வாழ்ந்த இரண்டு சிறுமிகளிடம் அத்துமீறல் - 8 பேர் போக்சோ சட்டத்தில் கைது

Jul 20, 2019 7:35 AM

திண்டிவனம் அருகே பெற்றோரை பிரிந்து பாட்டியிடம் வாழ்ந்த பள்ளி சிறுமிகளை சீரழித்த எட்டு பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தந்தை-மகன் ஆகிய இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளனர்.

புதுச்சேரியை சேர்ந்த இரண்டு சிறுமிகள் தாய் தந்தை பிரிந்துவிட்டதால் பாட்டி வீட்டில் தங்கி இரண்டாம் வகுப்பும் நான்காம் வகுப்பும் படித்து வந்தனர். தாய் இரண்டாம் திருமணம் செய்து புதுச்சேரிக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் யாரும் கேட்பாரற்ற நிலையில் சிறுமிகளிடம் தகாத முறையில் தொட்டு பேசி சாக்கலெட், பிஸ்கட் வாங்கிக் கொடுத்து தனது இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்ட துரை என்ற நபர் சிறுமிகளை சீரழித்தான். 

இதனை பார்த்து, தவறு செய்த தந்தையை கண்டிக்காமல் தானும் இந்த குற்றத்தை செய்த அவன் மகனான கல்லூரி மாணவன் மோகனும் தற்போது தலைமறைவாகிவிட்டனர். இவர்கள் இருவருடன் சேர்ந்து மேலும் எட்டு பேர் சிறுமிகளிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனை பாட்டி கண்டிக்காததால் இந்த கொடுமை தொடர்ந்து வந்தது. ஊரில் சிலர் தாயை சந்தித்து சிறுமிகளை அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர்.

இதையடுத்து தாய் வந்து குழந்தைகளையும் கடந்த 10ம் தேதி  தன்னுடன் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றார். அப்போது, சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமையை தெரிந்துக் கொண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நலக்குழுவிடம் தாய் அளித்த புகாரின் பேரில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட 10 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப் பதிவு செய்த போலீசார் எட்டு பேரை கைது செய்து தலைமறைவான தந்தை-மகனை தேடி வருகின்றனர்.