​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திரா தலைநகர் அமராவதி கட்டுமானப் பணிகளுக்கு கடன் இல்லை - கைவிரித்த உலக வங்கி

Published : Jul 20, 2019 7:25 AM



ஆந்திரா தலைநகர் அமராவதி கட்டுமானப் பணிகளுக்கு கடன் இல்லை - கைவிரித்த உலக வங்கி

Jul 20, 2019 7:25 AM

ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதியை கட்டமைக்க 2 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்குவதாக தெரிவித்திருந்த உலக வங்கி அதனை ரத்து செய்து விட்டது.

உலக வங்கியின் இயக்குனர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அறிவித்த செய்தித் தொடர்பாளர் சுதீப் மஜூம்தார், மேலும் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார்.

தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்னர் ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதியை தேர்வு செய்த அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டத்தை மத்தியஅரசிடம் சமர்ப்பித்தார். அப்போது மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று உலக வங்கி 2 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி அளிக்க முன்வந்தது. ஆனால் அமராவதி நகர விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, நிலத்தைத் தர மறுத்தவர்கள் மிரட்டப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இது குறித்த சுதந்திரமான விசாரணை நடத்த மத்திய அரசிடம்  உலக வங்கி அனுமதி கோரியது. ஆனால், விசாரணைக்கு அனுமதி மறுத்த மத்திய அரசு உலக வங்கியிடம் அளித்த கடன் விண்ணப்பத்தை திரும்பப்பெற்றுக் கொண்டது. இதனால், தனது கடன் வழங்கும் முடிவை ரத்து செய்துவிட்டதாக உலக வங்கி அறிவித்துள்ளது.