​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காரில் வந்து ரூ.15 லட்சம் வழிப்பறி..! 5 பேர் கைது - கத்தி, போலி துப்பாக்கி, பணம் பறிமுதல்

Published : Jul 20, 2019 6:25 AM



காரில் வந்து ரூ.15 லட்சம் வழிப்பறி..! 5 பேர் கைது - கத்தி, போலி துப்பாக்கி, பணம் பறிமுதல்

Jul 20, 2019 6:25 AM

கும்பகோணத்தில் 15 லட்ச ரூபாயை காரில் வந்து வழிப்பறி செய்த வழக்கில் 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கத்தி, போலி துப்பாக்கி, செல்போன்கள், மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். 

கும்பகோணம் அருகே கடந்த மாதம் 17 ஆம் தேதி தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் பிரபல காய்கறி மொத்த வியாபார ஏஜென்சியில் பணியாற்றி வரும் மேலாளர் முத்துக்குமார் என்பவர் காய்கறி விற்பனையில் வசூலான 14 லட்ச ரூபாயை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்துக் கொண்டு சென்றார். அப்போது தாராசுரம் அருகே அவரை காரில் வழிமறித்த கும்பல் ஒன்று 14 லட்ச ரூபாயை பறித்துச் சென்றது.

புகாரின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு சென்னையைச் சேர்ந்த இம்ரான், ஆயில் பாலாஜி, திருவள்ளூரைச் சேர்ந்த அப்துல் பாட்சா, சையது இப்ராஹீம், கும்பகோணத்தைச் சேர்ந்த கண்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து, ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரொக்கம், போலி துப்பாக்கி, கத்தி, போலி தோட்டாக்கள், போலி கையெறி குண்டு, மற்றும் 27 செல்போன்கள் 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர்கள் அனைவரும் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.