​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு பேருந்தை துரத்திய யானை - பயணிகள் அச்சம்

Published : Jul 20, 2019 6:20 AM



அரசு பேருந்தை துரத்திய யானை - பயணிகள் அச்சம்

Jul 20, 2019 6:20 AM

சத்தியமங்கலம் அருகே அரசுப் பேருந்தை யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் அரசு பேருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது சாலையில் ஓரிடத்தில் யானைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. யானைகள் சாலையோரம் நிற்பதைக் கண்ட ஓட்டுனர் பேருந்தை நிறுத்தியதால் கூட்டத்தில் இருந்த ஒரு யானை அரசுப் பேருந்தை துரத்தியபடி வந்தது.

பின்னர் யானை பேருந்து அருகே வந்துவிட்டு மீண்டும் சாலையோர வனப்பகுதியில் சென்று நின்றது. யானை அரசு பேருந்தை துரத்தியபடி வந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். துரத்திய யானை சாலையோர வனப்பகுதிக்குள் சென்றபின் பேருந்து புறப்பட்டு சென்றது.