​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏர்பேக் இன்ஃபிளேட்டரில் கோளாறு, 22,690 கார்களை திரும்ப பெறுகிறது போர்டு

Published : Jul 19, 2019 9:11 PM

ஏர்பேக் இன்ஃபிளேட்டரில் கோளாறு, 22,690 கார்களை திரும்ப பெறுகிறது போர்டு

Jul 19, 2019 9:11 PM

போர்டு இந்தியா நிறுவனம், தனது எஸ்.யூ.வி ரகமான, 22 ஆயிரத்து 690 எண்டோவர் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்திருக்கிறது.

முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஏர்பேக் இன்ஃபிளேட்டர்களில் உள்ள கோளாறு காரணமாக, எண்டோவர் கார்களை திரும்ப பெறுவதாக போர்டு இந்தியா நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த தகவலை, போர்டு இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியிருக்கிறது.

மேலும், குஜராத் மாநிலம் சாணாந்த் ஆலையில், 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையே, உற்பத்தி செய்யப்பட்ட, 30 ஆயிரம் எண்டோவர் கார்களில், பேட்டரி கண்காணிப்பு அமைப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தி வருவதாகவும், போர்டு இந்தியா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சென்னையில் உள்ள போர்டு தொழிற்சாலையில், 2004ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில், தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்ட 22 ஆயிரத்து 690 எண்டோவர் கார்களில், முன்பக்க ஏர்பேக் இன்ஃபிளேட்டரில் கோளாறு இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதை அடுத்து, அவற்றை திரும்பப்பெற முடிவு செய்திருப்பதாகவும், போர்டு இந்தியா நிறுவனம் கூறியிருக்கிறது.