​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

Published : Jul 19, 2019 9:06 PM

கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

Jul 19, 2019 9:06 PM

கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதியில் 3 ஊராட்சி ஒன்றியங்கள், 8 பேரூராட்சிகள், 72 ஊராட்சிகளைச் சேர்ந்த கிராமங்கள் பயன்பெறும் வகையில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. பவானி ஆற்றில் உள்ள கொடிவேரி கதவணையில் இருந்து குடிநீர் எடுத்து வழங்க 1,500 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இந்நிலையில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈரோட்டைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் தண்ணீர் பொதுமக்களுக்குவிநியோகம் செய்யாமல், சித்தோடு முதல் திருப்பூர் வரை உள்ள வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், குடிநீர் தேவைக்காக மட்டுமே இந்த கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், பல கிராம மக்கள் பலன் அடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.  இதை ஏற்ற நீதிபதிகள், தண்ணீர் பற்றாக்குறை நிலவும் நேரத்தில் யூகங்களின் அடிப்படையில் தாக்கல் செய்துள்ளதாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.