​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Published : Jul 19, 2019 5:59 PM

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Jul 19, 2019 5:59 PM

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அந்த மாநிலத்தை ஒட்டிய தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்து இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றார்.

மேலும் விருதுநகர், மதுரை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டமாக இருக்கும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும், மீனவர்கள் குமரி மற்றும் லட்சத்தீவு கடல் பரப்பிற்கு அடுத்த இரு நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

தென் மேற்கு பருவ மழை தாமதமாக தொடங்கியதால் வடகிழக்கு பருவ மழை தாமதமாக தொடங்கும் என்று சொல்ல முடியாது என்ற அவர், இரு பருவமழைகளுக்கும் தொடர்பு இல்லை என்றார்.

மேலும் தென் மேற்கு பருவ மழை செப்டம்பர் வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக புவியரசன் தெரிவித்தார்.