​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நம்பிக்கை வாக்கெடுப்பு: குமாரசாமிக்கு ஆளுநர் மீண்டும் கெடு

Published : Jul 19, 2019 3:33 PM

நம்பிக்கை வாக்கெடுப்பு: குமாரசாமிக்கு ஆளுநர் மீண்டும் கெடு

Jul 19, 2019 3:33 PM

உணவு இடைவேளைக்காக கர்நாடக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு, பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் தொடங்கியது.

நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது சித்தராமையா பேசியபோது, பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் விதித்த கெடு மதியம் ஒன்றரை மணியுடன் நிறைவடைந்துவிட்டதால், அவரது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன இருக்கும் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், மாலை 6 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா மீண்டும் கெடு விதித்துள்ளார்.