​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒப்பந்த ஆசிரியர்கள் நடத்திய பேரணியில் போலீஸ் தடியடி

Published : Jul 19, 2019 1:33 PM



ஒப்பந்த ஆசிரியர்கள் நடத்திய பேரணியில் போலீஸ் தடியடி

Jul 19, 2019 1:33 PM

பீகாரில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிகராக ஊதியம் வழங்கக்கோரி பேரணி நடத்திய ஒப்பந்த ஆசிரியர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

அம்மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையாக ஒரே ஓய்வூதியம் வழங்குவது, கல்வி சாரா பணிகளிலிருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கார்தானிபாக்((Gardanibagh)) பகுதியிலிருந்து சட்டப்பேரவை கட்டடம் நோக்கி ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஆசிரியர்கள் பேரணியாக சென்றனர்.

இதனை அறிந்து அங்கு சென்ற கார்தானிபாக் போலீசார், தடுப்பு வேலிகளை அமைத்து பேரணி நடத்தவர்களை தடுக்க முயன்றனர். இருப்பினும் ஆசிரியர்கள் தொடர்ந்து முன்னேறியதால்,  போலீசார் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.