​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாய் வீட்டில் வளர்ந்து வந்த சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை

Published : Jul 19, 2019 9:50 AM



தாய் வீட்டில் வளர்ந்து வந்த சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை

Jul 19, 2019 9:50 AM

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பெற்ற பெண் குழந்தைகளைக் கவனிக்காமல் தாய் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்திய நிலையில், அந்தக் குழந்தைகளின் தாய் மாமன் வேறு சிலருடன் சேர்ந்து குழந்தைகளை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

திண்டிவனத்தை அடுத்த தென்நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்து புதுச்சேரி கதிர்காமத்தில் வேறு ஒருவருடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. முதல் கணவர் மூலமாக பிறந்த  தனது 9 வயது மற்றும் 7 வயது மகள்களை தனது தாய்  பராமரிப்பில் அப்பெண்மணி விட்டுச் சென்று விட்டார். 

இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன் தற்போது சேர்ந்து வாழும் நபர் மூலம் அப்பெண்மணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அவர் தனது தாய்வீட்டுக்கு வந்ததாகவும் அப்போது சிறுமிகள் தங்கள் தாய்மாமன் உள்ளிட் சிலர் தங்களிடம் அத்து மீறி நடந்துகொள்வது குறித்து கூறி அழுததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து தனது இரு குழந்தைகளையும் தன்னுடன் புதுச்சேரி கதிர்காமத்துக்கு அழைத்து வந்த பெண் அங்கு அவர்களை அரசு பள்ளியில் சேர்த்தார். குற்றத்தில் தனது தம்பியும் சம்பந்தப்பட்டிருப்பதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது 7 வயது மகள் நடவடிக்கையில் சில மாற்றங்களை கண்டு திருத்துவதற்காக அடித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் சிறுமியின் கன்னம் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி ஆசிரியர் விசாரித்த போது தனது தாய் தன்னை கொடுமைப்படுத்துவதாக அந்தச் சிறுமி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதை அடுத்து ஆசிரியர் அந்த சிறுமிகள் காயம் அடைந்துள்ளது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் தகவல் அளித்தார். பெண்மணியின் வீட்டுக்கு வந்து விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர், சிறுமிகளை மருத்துவப் பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவப் பரிசோதனையில் பாலியல் அத்துமீறல் காரணமாக சிறுமிகளின் முக்கிய உறுப்புகள் உட்பட உடலின் பல இடங்களில் மோசமான காயம் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் சிறுமிகளின் தாயிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது  தனது தம்பியின் மூலமாக தனது குழந்தைகளுக்கு நடந்த விபரீதத்தை அப்பெண்மணி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமிகளின் தாய்மாமனான கஜேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் ரவிக்குமார், பிரபாகரன், அஜீத், தீனதயாளன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமிகளின் தாய்மாமனான கஜேந்திரன் மற்றும் அவனது நண்பர்களை பிடித்து விசாரணை நடத்திய போலீசார் கஜேந்திரன், தீனதயாளன், அஜித், பிரபாகரன், ரவிக்குமார், அருண் என்ற தமிழரசன், ரமேஷ், மகேஷ் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடி தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகின்றனர்.