​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கக்கன், நல்லகண்ணு குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கப்படும் - தமிழக அரசு

Published : Jul 19, 2019 8:03 AM



கக்கன், நல்லகண்ணு குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கப்படும் - தமிழக அரசு

Jul 19, 2019 8:03 AM

தியாகத்தால் புகழ் மிக்க கக்கன் மற்றும் நல்லகண்ணு குடும்பங்களுக்கு விரும்பிய இடத்தில் வாடகை இல்லாத வீடு ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அண்மையில் நல்லகண்ணு தமது வீட்டை ஒப்படைத்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். கக்கன் குடும்பத்தினர் இதுவரை குடியிருப்பை ஒப்படைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

சமூகத்தில் முக்கியமான நபர்களுக்கு பொது ஒதுக்கீட்டு முறையில் வீடுகள் வழங்கும் நடைமுறை குறித்து விளக்கம் அளித்த ஓ.பன்னீர்செல்வம், நல்லகண்ணுவை தாமே தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீடு அளிக்க உறுதியளித்ததாக தெரிவித்தார்.

நல்லகண்ணு, கக்கன் வீடுகளை பொருத்தவரை அவர்களை கட்டாயப்படுத்தி காலி செய்ய வைப்பதாக வந்த செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்த இரு மாபெரும் தலைவர்களுக்கும் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அரசு சார்பில் அவர்கள் குடும்பத்தினர் விரும்பிய இடத்தில் வாடகையின்றி வீடு ஒதுக்கித் தரப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.