​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜக.வில் இணைந்த திரைப்பட, தொலைக்காட்சி நடிகர், நடிகைகள்

Published : Jul 18, 2019 9:35 PM



பாஜக.வில் இணைந்த திரைப்பட, தொலைக்காட்சி நடிகர், நடிகைகள்

Jul 18, 2019 9:35 PM

வங்க மொழி திரைப்பட மற்றும் டிவி நடிகர், நடிகைகள் 12 பேர், பாஜகவில் இணைந்துள்ளனர்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ், மூத்த தலைவர் முகுல் ராய் ஆகியோர் முன்னிலையில், ரிஷி கவுசிக் ((Rishi Kaushik)), காஞ்சனா மொய்த்ரா ((Kanchana Moitra)), ரூபான்ஜனா மித்ரா ((Rupanjana Mitra)), பிஸ்வாஜித் கங்குலி ((Biswajit Ganguly)) உள்ளிட்ட வங்க மொழி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர், நடிகைகள், 12 பேர், பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகினர்.

நிகழ்ச்சியில் பேசிய மேற்குவங்க மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், தங்கள் கட்சியின் இணைவோரை, திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் துன்புறுத்துவதன் காரணமாகவே, டெல்லியில், விழாவை நடத்த வேண்டிய சூழல் உள்ளதாக குறிப்பிட்டார்.

டார்ஜிலிங் மாநகராட்சியைச் சேர்ந்த 17 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்த நிலையில், அவர்கள் இதுநாள் வரையில், அவரவர் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலையே, உள்ளதாகவும், திலீப் கோஷ் குறிப்பிட்டார்.