​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிகாரிகளின் கண்களுக்கு தெரியவில்லையா? - நீதிபதிகள் காட்டம்

Published : Jul 18, 2019 9:00 PM

அதிகாரிகளின் கண்களுக்கு தெரியவில்லையா? - நீதிபதிகள் காட்டம்

Jul 18, 2019 9:00 PM

சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுப்பது தொடர்பான விவகாரத்தில், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே பிடாரிதங்கல் கிராமத்தில், சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக கூறி, சிவசங்கர் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவு நகல் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கிடைக்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அதிகாரிகள் பத்திரிக்கை படிக்கமாட்டார்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்..  உத்தரவு நகல் கிடைக்கவில்லை என அதிகாரி கூறுவது அபத்தமானது என்றும் ஒரு நாளைக்கு 200 லாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுத்து செல்வது காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் கண்களுக்கு தெரியவில்லையா? என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பான வழக்குகளிலாவது, அதிகாரிகள் முறையாக பதிலளிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்து வழக்கை தள்ளி வைத்தனர்.