​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூட்டு தல மோதல்..! ரயிலில் தொடரும் மாணவர் அடாவடி..!

Published : Jul 18, 2019 8:52 PM

ரூட்டு தல மோதல்..! ரயிலில் தொடரும் மாணவர் அடாவடி..!

Jul 18, 2019 8:52 PM

ரயில் பயணத்தின் மூலம் கல்லூரிக்கு சென்று கல்வியை கற்பதுடன், ஒருபடி மேலே போய் கற்ற கல்விக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், வன்முறையில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி...

கல்விக் கண் திறந்தவர் கர்மவீரர் காமராஜர் காலத்தில் இருந்து மாணவர் நலனுக்குக்காகவே பல அரிய திட்டங்களை அரசு அறிவித்து, கல்வியை பயிலும் மாணவர்கள் வருங்கால தூண்கள் என்ற காலம் மாறி போய், பேருந்து கண்ணாடிகளை உடைப்பதும், ரயில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கற்களை கொண்டு வீசுவது, பொது இடங்களில் வன்முறையில் ஈடுபடும் கலாச்சாரம் தற்போது கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக அரக்கோணம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னையில் உள்ள பிரபல கல்லூரிக்கு மாணவர்கள் ரயிலில் வருகின்றனர்.

கல்லூரி நேரத்தை முடித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த மாணவர்கள், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தை கடந்த போது, அருகில் சென்ற மின்சார ரயில் மீது கற்களை கொண்டு வீசி வன்முறையில் ஈடுபட்டதை, ரயில் பயணி ஒருவர் செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மின்சார ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகி வரும் நிலையில், ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலுவான கோரிக்கையும் எழுந்துள்ளது.

மேலும் கல்லூரி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, மாணவர்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சியில், ரயில்வே காவல்த்துறை டிஜிபி சைலேந்திர பாபு பல கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றி வருகிறார்.

இளம் பருவத்தில் மாணவர்களின் உள்ளத்தில் எதை விதைக்கிறோமோ, அதற்கு ஏற்றார் போல் மாணவர்கள் வடிவமைக்கப்படுவார்கள் என்பது மட்டுமல்லாமல், மாணவ சமுதாயம் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என, கல்லூரி மாணவர்கள் இடையே உரையாற்றியதை பின்பற்றும் மாணவர்கள் மத்தியில், இப்படியும் இருக்கும் சில மாணவர்களால் மாணவ சமுதாயத்துக்கு களங்கமே...