​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பி.டி.எஸ். கலந்தாய்வு விறுவிறுப்பு

Published : Jul 18, 2019 6:56 PM

பி.டி.எஸ். கலந்தாய்வு விறுவிறுப்பு

Jul 18, 2019 6:56 PM

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில், எம்.பி.பி.எஸ். இடங்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில், பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கலந்தாய்வில், சுயநிதி பல்மருத்துவக் கல்லூரிகளில் 171 இடங்கள் நிரம்பின.

2019 - 20ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கடந்த 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இருந்த 3,968 எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பி விட்டன.

பல் மருத்துவப் படிப்பில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் 18 தனியார் கல்லூரிகளில் அரசு, அரசு ஒதுக்கீட்டில் ஆயிரத்து 70 இடங்கள் உள்ளன. அதில் அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்த 100 இடங்களும் நிரப்பப்பட்டன.

மொத்தமாக 510 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 690 பி.டி.எஸ். இடங்களில் 648 மீதமுள்ளன. இதில், இன்று நடைபெற்ற கலந்தாய்வில், சுயநிதி பல்மருத்துவக் கல்லூரிகளில் 171 இடங்கள் நிரம்பின.