​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குட்டி விமானத்தில் பட்டாசு நிரப்பி பக்கத்து வீட்டின் மீது தாக்குதல்

Published : Jul 18, 2019 6:32 PM

குட்டி விமானத்தில் பட்டாசு நிரப்பி பக்கத்து வீட்டின் மீது தாக்குதல்

Jul 18, 2019 6:32 PM

பிரேசில் நாட்டில் ஒருவர், குட்டி விமானத்தில் பட்டாசுகளை நிரப்பி பக்கத்து வீட்டினரை நோக்கி குறிவைத்து தாக்குதல் நடத்திய வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரேசிலில், குறிப்பிட்ட தெருவில் வசித்து வரும் சிலர் ஒன்றிணைந்து ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது பலத்த சத்தத்துடன் இசை ஒலிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த தெருவை சேர்ந்த இளைஞர் ஒருவர், அக்கம்பக்கத்தினருக்கு தகுந்த பாடம் கற்பித்து கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

image

அதன்படி தன்னிடம் இருந்த குட்டி விமானத்தில் பட்டாசுகளை நிரப்பிய அவர், அதனை நிகழ்ச்சி நடந்த பகுதி நோக்கி இயக்கி அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். பலத்த சத்தத்துடன் பட்டாசு வெடித்ததை கண்டு அச்சமடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கிருந்து ஓடினர்.

தற்போது இந்த வீடியோவானது வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை எனவும், அது வெறும் ஸ்டண்ட் தான் என பிரேசில் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.