​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனிமேஷன் ஸ்டூடியோவிற்கு தீவைத்த நபர் கைது

Published : Jul 18, 2019 6:25 PM



அனிமேஷன் ஸ்டூடியோவிற்கு தீவைத்த நபர் கைது

Jul 18, 2019 6:25 PM

ஜப்பானின் க்யோட்டோ ((Kyoto)), நகரிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோ கட்டிடத்திற்கு மர்ம நபர் தீவைத்ததில், கட்டிடம் முழுவதும் தீக்கிரையானது.

முதலில் தீவிபத்து என கருதப்பட்ட இந்த சம்பவம், பின்னர் திட்டமிட்ட தாக்குதல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோர சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. விபத்தின் போது கட்டிடத்துக்குள் 70க்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில், மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் எரிபொருள் போன்ற திரவத்தை ஊற்றி தீவைத்த 41 வயது நபரை, போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த நபர் இறந்து விடுங்கள் என சத்தமிட்டதாகவும், அதற்கு பின்னரே தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே அனிமேஷன் ஸ்டூடியோவின் தலைவர் ஹிதேகி ஹட்டா((Hideaki Hatta)), கடந்த காலங்களில் மின்னஞ்சல் மூலமாக தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக தெரிவித்துள்ளார்.