​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போராட்டத்தில் ஈடுபட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

Published : Jul 18, 2019 5:56 PM

போராட்டத்தில் ஈடுபட்ட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

Jul 18, 2019 5:56 PM

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஊதிய உயர்வு, மருத்துவர்கள் பணி இடங்களை நிரப்புவதற்கான அரசாணையை அமல்படுத்துதல், அரசு மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதனடிப்படையில் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.