​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல்

Published : Jul 18, 2019 5:07 PM



மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல்

Jul 18, 2019 5:07 PM

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் சகோதரருக்கு சொந்தமானது என கூறப்படும் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டுமனையை, வருமானவரித்துறை, பறிமுதல் செய்திருக்கிறது.

பினாமி பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், பினாமி சொத்துகளை கண்டறிந்து, நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியை, வருமான வரித்துறையிடம், மத்திய அரசு ஒப்படைத்திருக்கிறது.

இந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார்(Anand Kumar) மற்றும் அவரது மனைவி விச்சிடெர் லதா(Vichiter Lata) ஆகியோரிடம், பினாமி பெயரில், நொய்டாவில் வாங்கியதாக கூறப்படும் 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து குறித்து வருமானவரித்துறை விளக்கம் கேட்டது.

இதற்கு, மாயாவதி சகோதரரிடமிருந்து உரிய விளக்கம் கிடைக்காத நிலையில், நொய்டாவில் இருந்த, 3 லட்சத்து 4 ஆயிரத்து 920 சதுர அடி அளவுள்ள அதாவது 7 ஏக்கர் பரப்பளவிலான, பிரம்மாண்ட வீட்டு மனையை, வருமானவரித்துறையின், டெல்லி பினாமி தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

அண்மையில், தனது சகோதரர் ஆனந்த் குமாரை, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணை தலைவராக, மாயாவதி நியமித்திருந்த நிலையில், அவருக்கு சொந்தமானதாக கூறப்படும் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.