​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப்போவதில்லை என அறிவிப்பு

Published : Jul 18, 2019 4:34 PM



வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப்போவதில்லை என அறிவிப்பு

Jul 18, 2019 4:34 PM

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.

பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக தமிழகத்தில் வேலூர் தொகுதியில் மட்டும் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதில் போட்டியிடப்போவதில்லை என மக்கள் நீதிமய்யம் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர் வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் உத்வேகத்துடன் செயல்பட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதால் வேலூர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என கட்சி செயற்குழு முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.