​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பி.எட் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் நாளை தொடக்கம்

Published : Jul 18, 2019 4:21 PM



பி.எட் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப விநியோகம் நாளை தொடக்கம்

Jul 18, 2019 4:21 PM

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2 ஆண்டுகள் பி.எட். படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளன. 

 தமிழகம் முழுவதுமுள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 40, பி.எட். படிப்புக்கான இடங்கள் உள்ளன. 2019 - 20ம் கல்வியாண்டில் இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 2வது வாரத்தில் தொடங்க உள்ளது.

இதற்கான கலந்தாய்வை சென்னை வில்லிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நேரடி ஒற்றைச் சாளர முறையில் நடத்த உள்ளது. அதன்படி, கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் நாளை தொடங்க உள்ளது. ஜூலை 28ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 29ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு 500 ரூபாய் எனவும், பட்டியல் பிரிவினருக்கு 250 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை www.ladywillingdon.com என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது