​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சூரியா பட பாணியில் தங்க வியாபாரியிடம் கொள்ளை..!

Published : Jul 18, 2019 3:29 PM



சூரியா பட பாணியில் தங்க வியாபாரியிடம் கொள்ளை..!

Jul 18, 2019 3:29 PM

கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எனக்கூறி, கேரள தங்க வியாபாரியிடம் 13 லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் தலச்சேரியை சேர்ந்த தங்க வியாபாரி நவ்ஷாத் என்பவரை, அவரது நண்பரான விக்னேஷ் என்பவர், குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக, கோவைக்கு அழைத்து வந்துள்ளார்.

சிவா என்ற நபர் மூலம் தங்கத்தை வாங்கலாம் என்று கூறிய அவர், நவ்ஷாத்தை ஆட்டோ மூலம் சிவானந்தா காலனிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு காத்திருந்த சிவா இன்னோவா காரை காண்பித்து அதில் வியாபாரிகள் இருப்பதாக கூறியுள்ளார்.

அந்த காரில் நவ்ஷாத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் ஏறிய போது, காரில் இருந்த நான்கு பேர் கொண்ட கும்பல், தாங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எனக்கூறி, நவ்ஷாத் வைத்திருந்த 13 லட்சம் ரூபாயை பறித்துள்ளது.

அதில் ஒருவர் போலீஸ் உடையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள இரத்தினபுரி போலீசார் மோசடியில் ஈடுபட்ட ஐந்து பேரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். நண்பர் விக்னேஷ் மீதும் போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர்.