​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இணையதளத்தில் தமிழிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது

Published : Jul 18, 2019 1:07 PM



உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இணையதளத்தில் தமிழிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது

Jul 18, 2019 1:07 PM

 முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகள், தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தும் அதன் இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன. ஆனால் மனுதாரர்களுக்கு வசதியாக இருக்கும் வண்ணம், அந்தந்த மாநில மொழிகளில் தீர்ப்புகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. image

கோரிக்கையை ஏற்று, ஆந்திரா, அசாம், உள்ளிட்ட 12 மாநிலங்களில் இருந்து தொடுக்கப்பட்ட 100 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள், கடந்த 3ஆம் தேதி அன்று அந்தந்த மொழிகளில் வெளியிடப்பட்டன. ஆனால் அதில் தமிழ் இடம்பெறாமல் போனது, தமிழ் ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், தமிழ்மொழியிலும் தீர்ப்புகள் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. அதில், சரவண பவன் ராஜகோபாலின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தமிழில் இடம்பெற்றுள்ளது. தீர்ப்பு மொழி பெயர்ப்பில் பிழை இருந்தாலும், ஆங்கிலத்தில் வெளியான தீர்ப்பு மட்டுமே அதிகாரப்பூர்வமானது என்பது குறிப்பிடத்தக்கது.