​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
1,248 பள்ளிகளை மூடவுள்ளதாக வெளியான தகவல் தவறானது

Published : Jul 18, 2019 12:37 PM



1,248 பள்ளிகளை மூடவுள்ளதாக வெளியான தகவல் தவறானது

Jul 18, 2019 12:37 PM

ஒரு மாணவர் கூட இல்லாத 45 பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள ஆயிரத்து 248 பள்ளிகளை மூடிவிட்டு, அங்கு நூலகம் அமைக்க உள்ளதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ஆயிரத்து 248 பள்ளிகளை அரசு மூடுவதாக வெளியான தகவல் தவறானது என்று குறிப்பிட்டார்.

தமிழகத்தில் 45 பள்ளிகளில் மட்டுமே ஒரு மாணவர் கூட சேராமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த பள்ளிகளை மட்டும் தற்காலிகமாக நூலகங்களாக மாற்ற அரசு முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். இந்த 45 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அருகிலுள்ள பள்ளிகளில் நியமிக்கப்படுவார்கள் என்றும், இதனால் ஈராசிரியர் பள்ளிகள் 4 ஆசிரியர்களுடன் சிறப்பாக செயல்படும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.

நூலகங்களாக மாற்றப்பட்ட பள்ளிகளில் மீண்டும் 6 மாதத்திற்கு பின்னர் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், மாணவர்கள் சேரும்போது பள்ளிகள் செயல்படத்துவங்கும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
எந்த பள்ளிகளையும மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் செங்கோட்டையன் கூறினார்.