​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
7 பேர் விடுதலை தொடர்பாக நளினி தொடர்ந்த வழக்கில் பின்னடைவு

Published : Jul 18, 2019 12:24 PM



7 பேர் விடுதலை தொடர்பாக நளினி தொடர்ந்த வழக்கில் பின்னடைவு

Jul 18, 2019 12:24 PM

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர்  விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது  ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிட கோரிய நளினியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

விசாரணையின் போது ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், அவருக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

7 பேர் விடுதலை விவகாரம் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாகவும், வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தள்ளுபடி செய்யவும் கோரப்பட்டது.

ஆளுனருக்கு சட்டப் பாதுகாப்பு இருந்தாலும் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்க முடியாது என்றும், அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காததால் ஏழு பேரும் பேரும் சட்டவிரோத காவலில் இருப்பதாகவே கருதப்படும் என்றும் நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் நளினியின் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தனர்.