​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரயில் நிலையங்களில் ஆப்பரேசன் ஆம்லா என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை

Published : Jul 18, 2019 11:40 AM



ரயில் நிலையங்களில் ஆப்பரேசன் ஆம்லா என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை

Jul 18, 2019 11:40 AM

நாசவேலைகளில் ஈடுபடும் தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தவும், அனைத்து ரயில் நிலையங்களிலும் ஆப்பரேசன் ஆம்லா என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

ரயில்வே காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில், ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து இதில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில்நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்குப் பிறகு, ஸ்டிக்கர் ஒட்டிய பிறகே அனுமதிக்கப்படுகிறது. இதேபோல நடைமேடைகளிலும் சோதனைகள், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு ஒத்திகையின்போது, போலீசாராலேயே தீவிரவாதிகளைப் போல அனுப்பிவைக்கப்படும் நபர்கள் பிடிபடுகின்றனரா என்று பார்க்கப்படும். தீவிரவாதிகளைப் போல மாறுவேடமிட்ட நபர்கள் போலி வெடிபொருட்களுடன் ஊடுருவிவிட்டால், அது சோதனை மற்றும் கண்காணிப்பில் ஏற்பட்ட குறைபாடாகக் கருதப்பட்டு, அதை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.