​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பள்ளிக்குழந்தைகளை அடித்து கொடுமைப்படுத்தும் தலைமை ஆசிரியர்

Published : Jul 18, 2019 8:59 AM



பள்ளிக்குழந்தைகளை அடித்து கொடுமைப்படுத்தும் தலைமை ஆசிரியர்

Jul 18, 2019 8:59 AM

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கிப் படிக்கும் குழந்தைகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

சங்கவாக்கா என்ற கிராமத்தில் அமைந்துள்ள அந்தப் பள்ளியின் விடுதியில் ஏழைக் குழந்தைகள் பலர் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில் 20 நாட்களுக்கு முன் தலைமை ஆசிரியராக இங்கு பணி மாற்றலாகி வந்த கோடீஸ்வரராவ், விடுதியில் தங்கியிருக்கும் குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சிகளைக் கண்ட பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.