​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்

Published : Jul 18, 2019 6:59 AM



சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்

Jul 18, 2019 6:59 AM

இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்த வெளிநாட்டவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் , வங்காளதேசம் போன்ற நாடுகளின் சர்வதேச எல்லைகளில் உள்ள இந்திய பகுதிகளில் ஏராளமானோர் ஊடுருவி குடியேறி வருகின்றனர். இதனை கண்காணிக்கவும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பவும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மாநிலங்களவையில் இப்பிரச்சினை குறித்து விளக்கம் அளித்த அமித் ஷா, நாடு முழுவதும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை சர்வதேச சட்டவிதிகளின் படி சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஊடுருவல்களைத் தடுக்க,  எல்லைகளை கண்காணிக்கவும், அடர்த்தியான மின் விளக்குகளை வைக்கவும் வேலி அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.