​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3டி முறையில் டாட்டூ வரைந்து கொள்ளும் பழக்கம் அதிகரிப்பு

Published : Jul 18, 2019 6:39 AM



3டி முறையில் டாட்டூ வரைந்து கொள்ளும் பழக்கம் அதிகரிப்பு

Jul 18, 2019 6:39 AM

இங்கிலாந்தில் 3 டி முறையில் டாட்டூ எனப்படும் பச்சை குத்துதல் அதிகரித்து வருகிறது.

தற்போதைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் டாட்டூ குத்திக் கொள்ளும் பழக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து பெரும்பாலானவர்கள் குறிப்பிட்ட சில இடங்களில் டாட்டூ குத்திக் கொள்ளும் நிலையில் ஒரு சிலர் உடல் முழுவதும் டாட்டூ வரைந்து கொள்கின்றனர். இந்நிலையில் டாட்டூவில் அடுத்த நிலையான 3 டி முறையில் வரையப்படுகின்றன. வெஸ்ட் யார்க்சையர் என்ற இடத்தைச் சேர்ந்த சோலோவிவோவ் என்பவர் தனது வாடிக்கையாளர் ஒருவரின் பின் கழுத்துப் பகுதியில் சிலந்தி ஒன்று நிற்பதுபோல வரைந்துள்ளார்.

பார்ப்பதற்கு உயிருள்ள சிலந்தி போலவே இருப்பதால் சோலாவிவோவிடம் பச்சை குத்திக் கொள்ள ஏராளமானோர் நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுள்ளனர்.