​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இளைஞரின் வயிற்றில் இருந்த இரும்புப் பொருட்கள் அகற்றம்

Published : Jul 18, 2019 6:23 AM



இளைஞரின் வயிற்றில் இருந்த இரும்புப் பொருட்கள் அகற்றம்

Jul 18, 2019 6:23 AM

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஸ்குரு டிரைவர், கத்தி உள்பட 33 இரும்புப் பொருட்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் தாக்கூர் என்ற இளைஞர் ஒருவர் கடுமையான வயிற்று வலி காரணமாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு எக்ஸ்ரே எடுத்த மருத்துவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். அவரின் வயிற்றுக்குள் ஏராளமான இரும்புப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவருக்கு அறுவை செய்த மருத்துவர்கள் யோகேஷின் வயிற்றில் இருந்த பிளேடு, கத்தி, ஸ்குரூ டிரைவர் உள்ளிட்ட 33 இரும்புப் பொருட்களை அகற்றினர். மனநலம் பாதிக்கப்பட்டதால் யோகேஷ் இரும்புப் பொருட்களை விழுங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.