​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு தனி வீடு..!

Published : Jul 17, 2019 8:01 PM



கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு தனி வீடு..!

Jul 17, 2019 8:01 PM

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனி வீடுகளாக 16 ஆயிரத்து 695 வீடுகளும், அடுக்கு மாடி வீடுகளாக 28 ஆயிரத்து 671 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்,

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆடல் ஆரசு , கஜா புயலால் வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தனை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வீடு  கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவித்ததின் அடிப்படையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் தனி வீடுகளாகவும் நிலம் இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி வீடுகளாகவும் கட்டிக் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், நிலம் உள்ளவர்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயில் கான்கிரீட் வீடு கட்டுவதற்காக காசோலை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.