​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேலையிழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு பணி ஏற்பாடு

Published : Jul 17, 2019 6:00 PM

வேலையிழந்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு பணி ஏற்பாடு

Jul 17, 2019 6:00 PM

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு வேலை தேடித் தரும் பொருட்டு புதியஇணையதளம் உருவாக்கவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிதி நெருக்கடி சிக்கலால் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி முதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் செயலிழந்தது. அதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிய நிலையில் நூற்றுக்கணக்கானோர் தாங்களாகவே பல்வேறு நிறுவனங்களில் வேலை தேடிக் கொண்டனர்.

தற்போது வேலையிழந்து தவித்து வரும் ஊழியர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் அவர்கள் தகுதியுடன் பிற நிறுவனங்கள் பணிக்கு எடுக்கும் வகையில் பட்டியலிட்டு பதிவேற்றம் செய்ய புதிய இணையதளம் உருவாக்கப்படும் என உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ நிறுவனங்களுடனும் இது சம்பந்தமாக தொடர்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.