​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விரிவான வெள்ளத் தடுப்பு திட்டம் குறித்து கொள்கை விளக்க குறிப்பு

Published : Jul 17, 2019 3:37 PM



விரிவான வெள்ளத் தடுப்பு திட்டம் குறித்து கொள்கை விளக்க குறிப்பு

Jul 17, 2019 3:37 PM

விரிவான வெள்ளத் தடுப்பு திட்டம் உள்ளிட்ட 14 அம்சங்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, தூத்துக்குடி, இராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு அல்லாத விரிவான வெள்ளத்தடுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை குறைவாக பெறும் இராமநாதபுரம், திண்டுக்கல், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தருமபுரி, நாமக்கல்,அரியலூர் மாவட்டங்களில் நிலையான விவசாய முறைகள் மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ரீதியாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய பள்ளிக்கரணை, எண்ணூர், மன்னார் வளைகுடா பகுதிகளில் ஈரமான மற்றும் சதுப்பு நிலங்களை மீட்டெடுத்து பாதுகாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் நிலைகளை மீட்டெடுத்து வலுப்படுத்துவதோடு வெள்ளம் மற்றும் வறட்சியை சமாளிக்க நீர் நிலைகளை தூர்வாரி கொள்ளளவு மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பருவநிலை மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ள டெல்டா பாசன விவசாயிகளின் திறன் மேம்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலச்சரிவுகள், காட்டு தீ போன்றவற்றால்  நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் அபாயங்களை குறைக்க தனி கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.