​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் சூர்யாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published : Jul 17, 2019 2:48 PM



நடிகர் சூர்யாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

Jul 17, 2019 2:48 PM

நடிகர் சூர்யாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்று செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்திற்காகவும், தமிழ் மொழிக்காவும் பாடுபட்ட தியாகிகளுக்கான தினம் தமிழக அரசின் சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில், சங்கரலிங்கனார், செண்பகராமன், பாஷ்யம் என்ற ஆர்யா ஆகியோரது உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து எதையும் அரைகுறையாகப் படித்து விட்டு கருத்து சொல்லக் கூடாது என்று சூர்யாவை விமர்சித்ததற்கு விளக்கம் அளித்தார். இறுதி முடிவு எதுவும் எடுக்காத நிலையில், சூர்யா இதுபோல் பேசியதற்கு தாங்கள் மாற்று கருத்து தெரிவித்ததாகக் கூறினார்.