​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஊராட்சி பகுதிகளில் சாலைகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு - எஸ்.பி.வேலுமணி

Published : Jul 17, 2019 10:54 AM



ஊராட்சி பகுதிகளில் சாலைகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு - எஸ்.பி.வேலுமணி

Jul 17, 2019 10:54 AM

ஊராட்சி பகுதிகளில் சாலைகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று பேசிய திமுக உறுப்பினர் தா.மோ.அன்பரசன், சென்னை புறகர் பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், மக்கள் தொகை அதிகரிப்பால் குப்பை எடுக்கும் உபரகணங்களை கூடுதலாக வாங்கவும் கோரினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊராட்சி பகுதிகளில் சாலைகள் அமைக்க கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் சாலைகள் சீர் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

திடக்கழிவு மேலாண்மை அரசுக்கு சவால் நிறைந்த பணியாக இருந்தாலும் திறம்பட கையாண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

தேவைப்படும் இடங்களில் கூடுதல் குப்பை எடுக்கும் உபகரணங்கள் வாங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.