​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணிகள்: விளக்கம் கேட்ட மனித உரிமைகள் ஆணையம்

Published : Jul 17, 2019 8:32 AM

பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணிகள்: விளக்கம் கேட்ட மனித உரிமைகள் ஆணையம்

Jul 17, 2019 8:32 AM

நெல்லை மாவட்ட மலைப்பகுதியான மாஞ்சோலையில், சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டதால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விளக்கம் அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட மாஞ்சோலை, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய பகுதிகளில் 2000ம் மேற்பட்ட குடும்பத்தினர் தேயிலைத் தோட்ட பணியாளர்களாக உள்ளனர். மணிமுத்தாறு வனச் சோதனைச்சாவடி முதல் தலையணை வரை 6 கிலோ மீட்டர் வரை புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த மே 18ம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில் 2ம் கட்டப் பணிகளுக்காக பணம் ஒதுக்கப்படாததால் சாலைப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. தற்போது அடர்ந்த வனப்பகுதியில் வெறும் கற்களால் மட்டும் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல இருப்பதால் நெல்லை ஆட்சியர், களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் தலைமை வனபாதுகாவலர் ஆகியோர் 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.