​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மழை வெள்ளத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு

Published : Jul 17, 2019 8:23 AM

மழை வெள்ளத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு

Jul 17, 2019 8:23 AM

அஸ்ஸாம் மழை வெள்ளத்திற்கு இதுவரை 20 பேர் உயிரிழந்தனர்.

சுமார் 52 லட்சம் பேர் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடு உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

காசிரங்கா வனவிலங்குப் பூங்கா 90 சதவீத பரப்பு வெள்ளத்தில் தத்தளிக்கிறது. ஏராளமான சாலைகள், பாலங்கள், கரைகள் உடைந்து சேதம் அடைந்துள்ளன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துள்ள பிரதமர் மோடி உடனடியாக அஸ்ஸாம் அரசுக்கு 251 கோடியே 55 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அஸ்ஸாம் முதலமைச்சர் சரபானந்தா சோனோவாலிடம் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே பீகாரிலும் வெள்ளச்சேதம் கடுமையாக உள்ளது. 12 மாவட்டங்களில் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. நதிகள் கரை புரண்டு ஓடுவதால் மக்கள் வெள்ளத்தில் மிதக்கின்றனர்.