​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
10ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் மாயம், தேடும் பணி தீவிரம்

Published : Jul 17, 2019 7:57 AM

10ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் மாயம், தேடும் பணி தீவிரம்

Jul 17, 2019 7:57 AM

ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த 3 சிறுமிகளும் தோழிகள் என்றபோதும் வெவ்வேறு பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மழையில் இவர்கள் விளையாடியதாகவும், இதனால் பெற்றோர் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து 3 மாணவிகளும் கடந்த திங்கள் கிழமை பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வீடுகளை விட்டு வெளியேறினர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் விசாரித்து வருகின்றனர்.