​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தோழியிடம் கடலுக்குள் காதலை வெளிப்படுத்திய காதலன்

Published : Jul 17, 2019 7:13 AM

தோழியிடம் கடலுக்குள் காதலை வெளிப்படுத்திய காதலன்

Jul 17, 2019 7:13 AM

ஆஸ்திரேலியாவில் கடலடி ஆராய்ச்சியாளர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் பெண்ணிடம் கடலுக்குள் காதலை வெளிப்படுத்தினார்.

நியூ சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த டிம் காலின்ஸ் என்பவர், தனது தோழியான ஹெய்லே ஓ பிரைன் என்பவரை கடலடி ஆராய்ச்சிக்காக நெல்சன் வளைகுடா பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்தார். இருவரும் தங்கள் குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டிருந்த போது தான் வைத்திருந்த சிறிய புத்தகத்தில் உள்ளதை ஹெய்லேவுக்கு காட்டினார்.

தொடர்ச்சியாக தான் மறைத்து வைத்திருந்த மோதிரத்தை எடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஹெய்லேவிடம் வேண்டுகோள் விடுத்தார் டிம். இதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் டிம்மை கட்டியணைத்து தனது சம்மதத்தை தெரிவித்தார் ஹெய்லே.