​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கல்விக் கொள்கை - நடிகர் சூர்யாவின் கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு

Published : Jul 17, 2019 6:38 AM



கல்விக் கொள்கை - நடிகர் சூர்யாவின் கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு

Jul 17, 2019 6:38 AM

புதிய கல்வி கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட கமல்ஹாசன், தம்பி சூர்யாவுக்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டுக்காக சூர்யா மற்றும் அவர் குடும்பத்தினர் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள் எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு என்று குறிப்பிட்டுள்ள கமல், புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துகள் பலவற்றில் உடன்பாடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசுவதை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிப்பதாகவும் கமல்ஹாசன் தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.