​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்களை நியமிக்க முடிவு

Published : Jul 16, 2019 9:36 PM



இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்களை நியமிக்க முடிவு

Jul 16, 2019 9:36 PM

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு புதியவர்களை தேர்ந்தெடுக்க பிசிசிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய அணி பயிற்சியாளர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரோடு தலைமை பயிற்சியாளர், துணைப் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை பதவி நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பந்து வீச்சு , பீல்டிங் பயிற்சியாளர்கள், பிசியோதெராபிஸ்ட்,மேலாளர் உள்ளிட்ட பதவிக்களுக்கு விண்ணப்பங்களை கோரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், அவர்கள் 60 வயதை தாண்டியிருக்கக் கூடாது என்றும், பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர்கள் 10 டெஸ்ட் அல்லது 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜூலை 30-ந்தேதி வரை விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.