​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
BSNL நிறுவனத்தை நவீனப்படுத்த வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்

Published : Jul 16, 2019 8:13 PM

BSNL நிறுவனத்தை நவீனப்படுத்த வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம்

Jul 16, 2019 8:13 PM

சென்னையில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை நவீனப்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் ஆகியன தர்ணா போராட்டம் நடத்தின.

மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், வாடிக்கையாளர்களுக்கு பிராண்ட் பேண்ட், சிம் கார்டு மற்றும் இணையதள சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால் இந்நிறுவனத்தில் 4ஜி சேவை இல்லாததன் காரணமாக, அதன் வாடிக்கையாளர்கள் பிற நிறுவனத்தின் சேவையை பயன்படுத்த தொடங்கினர்.

இதனால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததோடு, அந்நிறுவனம் ஊழியர்களுக்கு முறையே ஊதியம் வழங்க முடியாத அளவிற்கு சரிவை சந்தித்தது. இதனால் அந்நிறுவன மற்றும் ஒப்பந்த ஊழியர்கள், நாடு தழுவிய அளவில், மாநில தலைநகரங்களில் செவ்வாய்கிழமை தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 500க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஆறு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.