​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூத்துக்குடியில் ஏற்படும் எல்லா மாசுவிற்கும் ஸ்டெர்லைட் பொறுப்பாக முடியாது - வேதாந்தா வாதம்

Published : Jul 16, 2019 8:08 PM

தூத்துக்குடியில் ஏற்படும் எல்லா மாசுவிற்கும் ஸ்டெர்லைட் பொறுப்பாக முடியாது - வேதாந்தா வாதம்

Jul 16, 2019 8:08 PM

துத்துக்குடியில் ஏற்பட்டுள்ள எல்லா மாசிற்கும் ஸ்டெர்லைட் ஆலை பொறுப்பாக முடியாது என வேதாந்த நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா குழுமம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் துத்துக்குடியில் ஏற்பட்டுள்ள எல்லா மாசுவிற்கும் ஸ்டெர்லைட் ஆலை பொறுப்பாக முடியாது என்று வாதிட்டார்.

நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டதாக கூறுவதற்கான எந்த ஆதாரங்களையும் அரசு இதுவரை கொடுக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கடல் மட்டத்தில் இருக்கும் கிராங்களில் நிலத்தடி நீரில் உப்பு நீர் புகுந்து விடுவதால் கிராமங்களின் நிலத்தடி நீர் மாசுடைவது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிலத்தடி நீர் மாசுவுக்கு ஸ்டெர்லைட் ஆலை தான் காரணம் என எப்படி கருத முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அதிக மாசு ஏற்படுத்திபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால், தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையங்கள் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும் தான் மாசு அடைவதாக கூறுவது ஏற்க முடியாது என்று வாதிட்டார்.
ஆரியமா சுந்தரம் வாதம் நிறைவடையாததால் விசாரணையை புதன்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.