​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழ்நாட்டின் 4 வெவ்வேறு நகரங்களில் புற்றுநோய் மையங்கள்

Published : Jul 16, 2019 6:46 PM

தமிழ்நாட்டின் 4 வெவ்வேறு நகரங்களில் புற்றுநோய் மையங்கள்

Jul 16, 2019 6:46 PM

மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட நான்கு நகரங்களில், புற்றுநோய் உயர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்றும், மாவட்ட அளவிலான மருத்துவமனைகளிலும் கீமோ தெரபி சிகிச்சை மையங்கள் நிறுவப்படவுள்ளதாக, சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில், மண்டல அளவில், 60 கோடி ரூபாய் செலவில், புற்றுநோய் மையங்கள் நிறுவப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புற்றுநோயாளிகள் அலைச்சலை தவிர்க்கும்பொருட்டு, அனைத்து மாவட்ட அளவிலான மருத்துவமனைகளிலும் கீமோ தெரபி சிகிச்சை மையங்கள் நிறுவப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் முதற்கட்ட கீமோ தெரபியினை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், அதன் பின்னர் தொடர் கீமோ தெரபியினை மாவட்ட மருத்துமனைகளில் நிறுவப்படவுள்ள மையங்களிலும் எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.