​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அவசர சிகிச்சை ஊர்திகள் ரூ.26.39 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

Published : Jul 16, 2019 6:46 PM

அவசர சிகிச்சை ஊர்திகள் ரூ.26.39 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

Jul 16, 2019 6:46 PM

தமிழ்நாடு அவசரகால ஊர்தி சேவை திட்டத்திற்கு கூடுதலாக 121 அவசர சிகிச்சை ஊர்திகள் 26 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின் புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். சென்னையில் உள்ள மனநல காப்பகத்தில் மனநல சிகிச்சை தரம் உயர்த்துவதற்காக ஒரு ஒப்புயர்வு மையம் 25 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிபீட்டில் ஏற்படுத்தப்படும் என அவர் அறிவித்தார்.  சுகாதாரத் துறையின் புதிய முயற்சியாக ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளின் ஒரு மருத்துவமனையில் இருந்து வேறு உயர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்காக 120 சிறப்பு வாகனங்கள் 19 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும் என்று அவர் தெரிரிவித்தார்.

மதுரை மாநகரில் 20 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் நிறுவப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். அனைத்து மாவட்டம், வட்டம் மற்றும் வட்டம் சாரா அரசு மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்டர் கருவிகள் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வர இயலாத நோயாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவ சேவை அளிக்கும் திட்டம் 287 வட்டாரங்களில் 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்தார்.