​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனிநபரின் ஆரோக்கியம் தொடர்பான ஆவணங்கள் பராமரிப்பு.!

Published : Jul 16, 2019 4:20 PM



தனிநபரின் ஆரோக்கியம் தொடர்பான ஆவணங்கள் பராமரிப்பு.!

Jul 16, 2019 4:20 PM

தனிநபரின் ஆரோக்கியம் தொடர்பான ஆவணங்களை மின்னணு முறையில் பராமரிக்க தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சகம், நிதி ஆயோக் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 14 அதிகாரிகள் அடங்கிய குழு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

டிஜிட்டல் முறையில் ஆவணங்களை பராமரிக்கும் திட்டத்திற்கு ஆதார் எண் வினியோகிக்கும் தனி நபர் அடையாள ஆணையம் மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துடன், சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆயூஷ்மான் பாரத் என்ற மத்திய அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தனிநபர் தகவல்களை பராமரிக்க தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷன் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அந்த குழு கோரிக்கை வைத்துள்ளது.

நோயாளியின் பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி, இடம், புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் தனிநபர் ஆரோக்கிய ஆவணத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.