​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியாரின் திருவுருவப்படம்

Published : Jul 16, 2019 1:04 PM



தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியாரின் திருவுருவப்படம்

Jul 16, 2019 1:04 PM

தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியாரின் திருவுருவப்படம் வரும் 19ம் தேதி மாலை முதலமைச்சரால் திறந்துவைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

வன்னியகுல சத்திரிய பொதுச் சொத்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்காக கடந்த ஆண்டு அக்டோபரில் அகில இந்திய வன்னியகுல சத்திரிய சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் பாராட்டு விழா நடைப்பெற்றது. அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியாரின் முழு உருவ படம் திறந்துவைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

சுதந்திர போராட்ட வீரரும், மூத்த அரசியல்வாதியுமான ராமசாமி படையாச்சியாருக்கு ஏற்கனவே தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள நினைவுமண்டபத்திற்கு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அதே போல் ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 16ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி ராமசாமி படையாச்சியாரின் திருவுருவ படம் சட்டப்பேரவையில் முதலமைச்சரால் திறந்துவைக்கப்படவுள்ளது. சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் அமரும் 5 வது மற்றும் 6வது பாகத்துக்கு இடையே இந்த படம் அமைக்கப்படவுள்ளது.